காட்ஜெட்ஸ் பத்தி பேசலாமா!!!

தலைப்பை பார்த்துட்டு நான் ஏதோ எக்ஸ்பர்ட்னு நினைச்சிடாதீங்க…ஏதோ எனக்கு தெரிஞ்ச 2-3 காட்ஜெட்ஸ் பத்தி பேசலாம்னு நினைக்குறேன்…

முதலில் JBL !!!

JBL என்பது உலகளவில் முக்கியமான ஒலிபெருக்கி (speaker) நிறுவனங்களில் ஒன்று… இந்தியாவிலும் நிறைய மாடல்கள் உள்ளன… சிறிய ரக ப்ளூடூத் ஸ்பீக்கரில் இருந்து பெரிய அளவிலான ஹோம் தியேட்டர் வரை பல விதங்களில் கிடைக்கின்றன.. நமது விருப்பம் மற்றும் வீட்டில் உள்ள இட  வசதியை பொறுத்து நமக்கு தேவையான ஸ்பீக்கரை தேர்ந்தெடுக்கலாம். பெரிய ஹாலும் 35 -40 ஆயிரம் வரை செலவு பண்ணுவதற்கு வசதி இருந்தால் நல்லதாக ஒரு ஹோம்  தியேட்டர் சிஸ்டம் வாங்கி கொண்டாடலாம்.இதற்காக லட்சங்களில் செலவு செய்பவர்களெல்லாம் இருக்கிறார்கள்.. அது சாத்தியமில்லையா … கவலை வேண்டாம்.. கொஞ்சமாக விட்டு கொடுக்க தயாராக இருந்தால் ஒரு நல்ல மாற்று உபாயம் உள்ளது.

அது தான் JBL sound bar.. இதை தமிழ் படுத்தினால் ரொம்ப படுத்துவது போல் இருக்கும்.. அதனால் அப்படியே விட்டு விடலாம் 🙂 கீழே உள்ள படத்தை பாருங்கள், சவுண்ட் பர்னா என்னவென்று தெரியும்.

jbl1

இந்த சவுண்ட் பார்ல பொதுவாக 2 ஸ்பீக்கர், amplifier, sub-woofer எல்லாம் சேர்ந்து ஒரு பார்(செவ்வக) வடிவில் இருக்கும்.. சில மாடல்களில் sub-woofer மட்டும் தனியாகவும் வரும். sub-woofer தனியாக இருந்தால் ஸ்பீக்கர் effect இன்னும் நன்றாக இருக்கும். இதை சுவற்றில் நாமே எளிதாக மாட்டி கொள்ளலாம். விலையும் 15ஆயிரத்துக்குள் தான் வரும். இதை TV மற்றும் மொபைலில் இருந்து connect பண்ணி கொள்ளும் வசதி இருப்பதால் உபயோகிப்பது எளிது.

இந்த சவுண்ட் பார் இல்லாம நான் பயன் படுத்துற இன்னொரு பொருள் JBL Dock Speaker…இது முக்கியமா இரவு தூங்கும் பொழுது பாடல் கேட்பதற்கு நல்ல சாய்ஸ்…சின்ன speaker ஆனா நல்ல quality sound… FM இல்லை உங்க choice பாட்டு கேட்டுகிட்டு சுகமா தூங்கலாம்.

jbl_dock

இளையராஜாவோ ரஹ்மானோ அனிருத்தோ JBL-ல் பாட்டு கேட்பது ஒரு சுகமான அனுபவம்… எனது 6 வயது மகள் எண்பதுகளில் வந்த இளையராஜா பாடலை hum பண்ணுகிறாள் என்றால் பார்த்து கொள்ளுங்கள் நமது இசையின் மகிமையை…

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !!!

இது ஒரு அறிமுகம் தான்… தேட நிறைய இருக்கிறது… சேர்ந்து தேடலாம்…

Advertisements