நாடி ஜோதிடம் -நம்பலாமா?! – 1

நம்மல்ல பெரும்பாலோருக்கு எதிர் காலத்தை பத்தி தெரிஞ்சுக்கிற ஆர்வம் இருக்கும்… ஆர்வம் இல்லாட்டி அவங்கள தெய்வ பிறவினு தான் சொல்லணும்.. இன்னைலருந்து 10 வருசத்துல நீ அம்பானி மாதிரி ஆயிருவனு யாரவது சொன்ன சந்தோசமா தான இருக்கும்..ஒவ்வொரு பெயர்ச்சியின் போதும், அது குருவோ சனியோ இல்ல ராகு கேதுவோ நமக்கு என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்குறதுல அலாதி ஆர்வம்.. அதும் இப்பலாம் ஒவ்வொரு ராசிக்கும் மார்க்கெல்லாம் போட ஆரம்பிச்சுட்டாங்க… நமக்கு நல்ல காலம் வருதோ இல்லையோ, ஜோதிட ரத்னாக்களுக்கு நல்ல வாழ்வுதான் இப்பலாம்…

சரி, இதெல்லாம் உண்மையா…? நம்பலாமா.. ? ஆயிரம் வருசத்துக்கும் மேல இந்தியா உட்பட உலகின் பல நாடுகள்ல பல விதங்கள்ல இந்த ஜோதிடம் சார்ந்த நம்பிக்கைகள் இருந்துட்டு தான் வந்திருக்கு..  அதுல ஒன்னு தான் நாடி ஜோதிடம்.. அது சம்பந்தமான என்னோட எண்ணங்களை உங்களோட பகிர்ந்துக்க தான் இந்த பதிவு.

இந்த நாடி ஜோதிடத்தோட அடிப்படை நம்பிக்கை என்னனா, இந்த உலகத்துல பிறக்கப்போற ஒவ்வொரு மனிதனோட வாழ்க்கையும் முன்னரே விதிக்கப்பட்டது.. Yes..we all are living a predefined life.. எனக்கு இந்த கான்செப்ட்ட நம்பாம இருக்க முடியல.நான் இதை ஒரு சில தடவை feel பண்ணி இருக்கேன்.. நீங்க கூட நிதானமா யோசிச்சு பாருங்க..

நாடி ஜோதிடத்துல என்ன சொல்றாங்கன்னா, நம்ம எல்லோரோட வாழ்க்கையும் எப்படி இருக்குங்கிறத முன்னாடியே கணிக்கப்பட்டு சித்தர்களால் ஓலை சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. நமக்கு தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வரும்போது நாமே நாடி சென்று தெரிந்து கொள்ளலாம்.. இந்த அம்சம் தான் நாடி ஜோதிடத்தை மற்ற முறைகளில் இருந்து வேறுபடுத்துகிறது. பெரும்பாலான மக்களுக்கு அறிமுகமான திருக்கணித/வாக்கிய பஞ்சாங்க ஜோதிடமானது நாம பிறக்கும் பொது கோள்கள் இருந்த நிலையையும் இப்ப உள்ள கோள்களின் கோச்சார நிலையையும் கருத்தில் கொண்டு பல கணக்குகளின் அடிப்படையில் நமது எதிர்காலத்தை கணிப்பது.. இந்த முறையில் நம் எதிர் காலத்தை தெரிந்து கொள்வது முழுக்க முழுக்க ஜோதிடரின் திறமையில் தான் இருக்கிறது…இதற்கு முதலில் உண்மையான ஜோதிடரை கண்டு பிடிக்க வேண்டும்… உங்களுக்கே தெரியும் இப்பலாம் உண்மைய விட போலி தான் எல்லாத்துலயும் அதிகம்… அதன் பின் அந்த ஜோதிடரின் அனுபவ அறிவும் ரொம்ப முக்கியம்…அதற்கும் மேலே அதிர்ஷ்டமும் வேண்டும்.. ஏனென்றால் ஒவ்வொரு பலனையும் துல்லியமாக தெரிய வேண்டும் என்றால் ஏகப்பட்ட permutation & combinations உள்ளன. ஆனால் நாடி ஜோதிடத்தில் இவை எல்லாம் துல்லியமாக கணக்கிடப்பட்டு முழு வாழ்க்கையும் இப்படித்தான் இருக்குமென்று எழுதி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஒரு காரணத்தினால் தான் நாடி ஜோதிடம் மற்ற முறைகளை விட நம்பகமானது என எனக்கு தோணுகிறது.

பொதுவாக இந்த ஓலை சுவடிகளெல்லாம் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு சித்தர்களால் எழுதப்பட்டதாக நம்ப படுகிறது…பின் இவை அந்த சித்தர்களின் சீடர்கள் மற்றும் குடும்பங்களால் வழி வழியாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன..காலப்போக்கில் பல ஓலைகள் அழிந்தும் போயிருக்கலாம்.. எஞ்சி உள்ளவை இன்னும் சில குடும்பங்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன…அவர்கள் தான் இந்த தொழிலை இப்போதும் செய்து வருகின்றனர்.. பொதுவாக இவர்கள் அனைவரும் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் தான் வாழ்ந்து வந்துள்ளனர்… இப்போது இந்த தொழிலில் உள்ள லாபத்தை பார்த்து சிறிது சிறிதாக மற்ற ஊர்களுக்கும் இடம் பெயர்ந்துள்ளார்கள்.. அந்த விதத்தில் எனக்கு தெரிஞ்சு காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் நம்பகமான சிலர் உள்ளனர். இந்த தொழில் தேவைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் இந்த ஓலைகள் பல முறை நகல் எடுக்க பட்டிருக்கின்றன. அதனால் இந்த ஓலைகள் பார்வைக்கு புதியதாகவும் இருக்கலாம். நமது எதிர்கால பலன்களை தெரிந்து கொள்வதற்கு இவர்களில் யாரவது ஒருவரை நாம் அணுக வேண்டும்.  அது ஒரு தனி மனிதராக இருக்கலாம் அல்லது ஒரு அமைப்பாக இருக்கலாம்.

சரி… இப்ப இந்த நாடி ஜோதிடம் எப்படி தெரிஞ்சுக்கிறதுனு பார்க்கலாம்.. எங்க தெரிஞ்சுக்கிறதுங்கிறத கடைசில சொல்றேன்.. நீங்க நாடி ஜோதிட நிலையத்தை அணுகுறீங்கன்னு வச்சுக்குவோம்.. அவங்க உங்ககிட்ட இருந்து உங்க பெருவிரல் கைரேகையை எடுத்துக்குவாங்க… ஆண்களுக்கு வலது கை மற்றும் பெண்களுக்கு இடது கைனு நினைக்குறேன். உங்க ரேகையை அடையாளம் வச்சுக்கிறதுக்காக உங்க ஊரு பேரை கேட்பாங்க. நீங்க பிறந்த ஊரை சொல்லணும்னு அவசியம் இல்லை.. இது வெறும் அடையாளத்துக்கு மட்டும் தான்.

இப்ப உங்க கைரேகையை வச்சு உங்களுக்கான ஓலையை கண்டு பிடிக்கணும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு மூல(main) ஓலை மற்றும் விரிவான பலன்களுடலான ஓலை இருக்கும். முதலில் உங்களின் மூல ஓலையை கண்டு பிடிக்க வேண்டும். அது கொஞ்சம் நேரம் எடுக்கும்.. எப்படினு அடுத்த பதிவுல பார்ப்போமே.. 🙂

 

 

Advertisements

2 Comments (+add yours?)

  1. karthi
    Mar 22, 2018 @ 16:23:14

    சார் நான் வாழ்க்கையில் மிகவும் அடிபட்டு நொந்து போய் இருக்கிறேன். அடுத்தது என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனக்கு நாடி ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளது. ஆனால் நாடி ஜோதிடம் பற்றி பலரும் கூறும் விசயங்கள் எதுவும் நம்புகிற மாதிரி இல்லை. ஆனால் ஒரு சிலர் மிக நல்ல விதமாக கூறுகிறார்கள். இதை பார்த்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால் “நாடி ஜோதிடம் உண்மை. ஆனால் நாம் தான் சரியான ஜோதிடரிடம் போக வேண்டும்”. இந்த சமயத்தில் தான் நீங்கள் உங்கள் தளத்தில் நாடி ஜோதிடம் பற்றி கூறி இருந்தீங்க. அதில் உண்மை இருப்பதாக நான் பீல் பண்றேன். ஏன்னா இந்த விசயத்தில் பொய் சொல்லி நீங்கள் அடைய போவது ஒன்றும் இல்லை. தயவுசெய்து நீங்க பார்த்த உண்மையான நாடி ஜேசியர்களை பத்தி உங்களுக்கு தெரிஞ்ச எல்லா தகவல்களையும் எனக்கு கொடுத்து உதவுங்க சார். உங்களுங்கு புண்ணியமா போகும். அந்த ஜோசியரோட பேர், அந்த ஜேதிட நிலையத்தின் பெயர் , போன் நம்பர், முகவரி போன்ற விவரங்களை என்னோட என்னோட மெயில் ஐடிக்கு மெயில் அனுப்புங்கள் சார் பிளீஸ். என்னோட மெயில் ஐடி jkarthiapk@gmail.com

    Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: