நாடி ஜோதிடம் -நம்பலாமா?! – 1

நம்மல்ல பெரும்பாலோருக்கு எதிர் காலத்தை பத்தி தெரிஞ்சுக்கிற ஆர்வம் இருக்கும்… ஆர்வம் இல்லாட்டி அவங்கள தெய்வ பிறவினு தான் சொல்லணும்.. இன்னைலருந்து 10 வருசத்துல நீ அம்பானி மாதிரி ஆயிருவனு யாரவது சொன்ன சந்தோசமா தான இருக்கும்..ஒவ்வொரு பெயர்ச்சியின் போதும், அது குருவோ சனியோ இல்ல ராகு கேதுவோ நமக்கு என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்குறதுல அலாதி ஆர்வம்.. அதும் இப்பலாம் ஒவ்வொரு ராசிக்கும் மார்க்கெல்லாம் போட ஆரம்பிச்சுட்டாங்க… நமக்கு நல்ல காலம் வருதோ இல்லையோ, ஜோதிட ரத்னாக்களுக்கு நல்ல வாழ்வுதான் இப்பலாம்…

சரி, இதெல்லாம் உண்மையா…? நம்பலாமா.. ? ஆயிரம் வருசத்துக்கும் மேல இந்தியா உட்பட உலகின் பல நாடுகள்ல பல விதங்கள்ல இந்த ஜோதிடம் சார்ந்த நம்பிக்கைகள் இருந்துட்டு தான் வந்திருக்கு..  அதுல ஒன்னு தான் நாடி ஜோதிடம்.. அது சம்பந்தமான என்னோட எண்ணங்களை உங்களோட பகிர்ந்துக்க தான் இந்த பதிவு.

இந்த நாடி ஜோதிடத்தோட அடிப்படை நம்பிக்கை என்னனா, இந்த உலகத்துல பிறக்கப்போற ஒவ்வொரு மனிதனோட வாழ்க்கையும் முன்னரே விதிக்கப்பட்டது.. Yes..we all are living a predefined life.. எனக்கு இந்த கான்செப்ட்ட நம்பாம இருக்க முடியல.நான் இதை ஒரு சில தடவை feel பண்ணி இருக்கேன்.. நீங்க கூட நிதானமா யோசிச்சு பாருங்க..

நாடி ஜோதிடத்துல என்ன சொல்றாங்கன்னா, நம்ம எல்லோரோட வாழ்க்கையும் எப்படி இருக்குங்கிறத முன்னாடியே கணிக்கப்பட்டு சித்தர்களால் ஓலை சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. நமக்கு தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வரும்போது நாமே நாடி சென்று தெரிந்து கொள்ளலாம்.. இந்த அம்சம் தான் நாடி ஜோதிடத்தை மற்ற முறைகளில் இருந்து வேறுபடுத்துகிறது. பெரும்பாலான மக்களுக்கு அறிமுகமான திருக்கணித/வாக்கிய பஞ்சாங்க ஜோதிடமானது நாம பிறக்கும் பொது கோள்கள் இருந்த நிலையையும் இப்ப உள்ள கோள்களின் கோச்சார நிலையையும் கருத்தில் கொண்டு பல கணக்குகளின் அடிப்படையில் நமது எதிர்காலத்தை கணிப்பது.. இந்த முறையில் நம் எதிர் காலத்தை தெரிந்து கொள்வது முழுக்க முழுக்க ஜோதிடரின் திறமையில் தான் இருக்கிறது…இதற்கு முதலில் உண்மையான ஜோதிடரை கண்டு பிடிக்க வேண்டும்… உங்களுக்கே தெரியும் இப்பலாம் உண்மைய விட போலி தான் எல்லாத்துலயும் அதிகம்… அதன் பின் அந்த ஜோதிடரின் அனுபவ அறிவும் ரொம்ப முக்கியம்…அதற்கும் மேலே அதிர்ஷ்டமும் வேண்டும்.. ஏனென்றால் ஒவ்வொரு பலனையும் துல்லியமாக தெரிய வேண்டும் என்றால் ஏகப்பட்ட permutation & combinations உள்ளன. ஆனால் நாடி ஜோதிடத்தில் இவை எல்லாம் துல்லியமாக கணக்கிடப்பட்டு முழு வாழ்க்கையும் இப்படித்தான் இருக்குமென்று எழுதி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஒரு காரணத்தினால் தான் நாடி ஜோதிடம் மற்ற முறைகளை விட நம்பகமானது என எனக்கு தோணுகிறது.

பொதுவாக இந்த ஓலை சுவடிகளெல்லாம் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு சித்தர்களால் எழுதப்பட்டதாக நம்ப படுகிறது…பின் இவை அந்த சித்தர்களின் சீடர்கள் மற்றும் குடும்பங்களால் வழி வழியாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன..காலப்போக்கில் பல ஓலைகள் அழிந்தும் போயிருக்கலாம்.. எஞ்சி உள்ளவை இன்னும் சில குடும்பங்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன…அவர்கள் தான் இந்த தொழிலை இப்போதும் செய்து வருகின்றனர்.. பொதுவாக இவர்கள் அனைவரும் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் தான் வாழ்ந்து வந்துள்ளனர்… இப்போது இந்த தொழிலில் உள்ள லாபத்தை பார்த்து சிறிது சிறிதாக மற்ற ஊர்களுக்கும் இடம் பெயர்ந்துள்ளார்கள்.. அந்த விதத்தில் எனக்கு தெரிஞ்சு காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் நம்பகமான சிலர் உள்ளனர். இந்த தொழில் தேவைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் இந்த ஓலைகள் பல முறை நகல் எடுக்க பட்டிருக்கின்றன. அதனால் இந்த ஓலைகள் பார்வைக்கு புதியதாகவும் இருக்கலாம். நமது எதிர்கால பலன்களை தெரிந்து கொள்வதற்கு இவர்களில் யாரவது ஒருவரை நாம் அணுக வேண்டும்.  அது ஒரு தனி மனிதராக இருக்கலாம் அல்லது ஒரு அமைப்பாக இருக்கலாம்.

சரி… இப்ப இந்த நாடி ஜோதிடம் எப்படி தெரிஞ்சுக்கிறதுனு பார்க்கலாம்.. எங்க தெரிஞ்சுக்கிறதுங்கிறத கடைசில சொல்றேன்.. நீங்க நாடி ஜோதிட நிலையத்தை அணுகுறீங்கன்னு வச்சுக்குவோம்.. அவங்க உங்ககிட்ட இருந்து உங்க பெருவிரல் கைரேகையை எடுத்துக்குவாங்க… ஆண்களுக்கு வலது கை மற்றும் பெண்களுக்கு இடது கைனு நினைக்குறேன். உங்க ரேகையை அடையாளம் வச்சுக்கிறதுக்காக உங்க ஊரு பேரை கேட்பாங்க. நீங்க பிறந்த ஊரை சொல்லணும்னு அவசியம் இல்லை.. இது வெறும் அடையாளத்துக்கு மட்டும் தான்.

இப்ப உங்க கைரேகையை வச்சு உங்களுக்கான ஓலையை கண்டு பிடிக்கணும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு மூல(main) ஓலை மற்றும் விரிவான பலன்களுடலான ஓலை இருக்கும். முதலில் உங்களின் மூல ஓலையை கண்டு பிடிக்க வேண்டும். அது கொஞ்சம் நேரம் எடுக்கும்.. எப்படினு அடுத்த பதிவுல பார்ப்போமே.. 🙂

 

 

பயணம் – தாராசுரம் &திருவிசாநல்லூர் 2

திருவிசாநல்லூரை சுற்றி பார்த்தாச்சா..அடுத்து தாராசுரம் செல்லலாம்.. தூரம் என்று பார்த்தால் வெறும் 15km தான்.. ஆனால் டிராபிக்,oneway காரணமாக கொஞ்சம் லேட்டா ஆகலாம்..அதிகபட்சம் 45 நிமிஷம் ஆகலாம் அவ்வளவு தான்..

darasuram_map2

கோவிலை ஒட்டியே கார் பார்க்கிங் மற்றும் டாய்லெட் வசதிகள் உள்ளன.இந்த கோவில்  UNESCO World Heritage Site கீழ் வர்றதுனால அடிப்படை வசதிகள் நன்றாகவே உள்ளது. கோவிலை சுற்றியும் உள்ள கார்டன் நன்றாக பராமரிக்க படுகிறது…குடும்பத்தோடு உட்கார்ந்து பொழுது போக்க நல்ல இடம்… மேலும் அதிக விவரங்களுக்கு wiki page.

dara2

கோவில் உள்ளே வந்து விட்டால் நிறைய திறந்த வெளியும் சிற்பங்களும் உங்களை சோழர் காலத்தை பற்றி கண்டிப்பாக சிந்திக்க வைக்கும்…குதிரைகளால் இழுக்கப்படும் ரத வடிவிலான மண்டபம் இந்த கோவிலின் சிறப்பு…இன்னொரு நல்ல விஷயம், கூட்டம் அதிகம் இல்லாததால் நிதானமாக ரசிக்கலாம்..

dara1

தஞ்சை கோவிலும் சரி இந்த கோவிலும் சரி பக்தியை விட கலை ரசனைக்கு தான் நிறைய விஷயங்கள் உள்ளன.. அர்ச்சகர்களும் நன்கு பழகுகிறார்கள். லிங்கத்துக்கு மிக அருகில் சென்று வழிபடவும் அனுமதிக்கிறார்கள்…

dara3

கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை பற்றி நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். அதுவும் கலை ரசனைக்கும் பொழுது போக்குக்குமான கோவிலே.. அதுவும் சென்னையிலிருந்து கும்பகோணம் வரும் வழியில் தான் உள்ளது.. அந்த கோவிலை பற்றிய நிறைய தகவலைகள் இணையத்தில் போதுமான அளவு உள்ளது..

இன்னொரு இனிய விஷயம்… பொன்னியின் செல்வன் நாவலில் வரும் பல பாத்திரங்களின் பெயர்களில் உள்ள ஊர்களை இந்த பயணத்தில் நீங்கள் பார்க்கலாம்.

நான் இது வரை கும்பகோணத்தில் தங்கியதே இல்லை.. பெரும்பாலும் திருக்கடையூரில் தான் தங்குவேன். அதனால் கும்பகோணத்தில் உள்ள தங்குமிடங்கள் பற்றி எனக்கு ஐடியா இல்லை. ஆனால் நிறைய Homestay options இணையத்தில் உள்ளன.

கமர்சியலாக்கப்பட்ட கோவில்களை விட இந்த மாதிரி கோவில்கள் நல்ல அனுபவத்தை தருகின்றன.. அந்த விதத்தில் எனக்கு பிடித்த கோவில்களை பற்றி தொடர்ந்து எழுதுகிறேன்.

 

பயணம் – தாராசுரம் &திருவிசாநல்லூர் 1

நண்பர்களே… எனக்கு பிடித்த இரண்டு கோவில்களை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்…இரண்டுமே கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ளன..

  1. தாராசுரம் ஐராவதேஸ்வர் கோவில்
  2. திருவிசாநல்லூர் சிவயோகிநாதர் கோவில்

சென்னையிலிருந்து 350km தொலைவிற்குள் இருப்பதால் வார இறுதியில் சென்று வர ஏற்ற இடம். காரில் செல்ல ஒரு 6 மணி நேரம் ஆகும்.

darasuram_map

சென்னையில் இருந்து ரெகுலராக travel பண்றவுங்களுக்கு தெரியும் செங்கல்பட்டு டோல்கேட்டை தாண்டுவது எவ்வளவு முக்கியம்னு.. காலை 6 மணிக்கு முன்னால் அதை தாண்டிவிட்டால் பயண நேரம் வெகுவாக குறையும். உங்கள் பயணத்தை பிளான் பண்ணும் போது இதை மனதில் வைத்து கொள்ளவும்.

அடுத்த முக்கியமான விஷயம் காலை உணவு.இதை 2 விதமா பிளான் பண்ணலாம். ஒன்னு நம்மளே சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு போகிறது… இல்ல வழியில் நல்ல ஹோட்டல்ல சாப்பிடுகிறது.. இது ரெண்டுக்குமே பொருத்தமான இடம் மதுராந்தகத்தை தாண்டியதும் இருக்கு…

99 காபி – இந்த கடைல கார பார்க் பண்ண நல்ல இட வசதி இருக்கு.. அதோட நீங்க கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிடவும் வசதியா டேபிள், சேர் இருக்கு. காபி, வடை,தண்ணி போன்றவற்றை அவங்க கடைல வாங்கிக்கலாம். ரொம்ப ரொம்ப முக்கியமா சுத்தமான டாய்லெட் வசதியும் இருக்கு..

99km

ஹோட்டல் ஹரிதம் -நல்ல டேஸ்ட், நல்ல வசதி

haritham

நல்லா சாப்டாச்சா.. ரிலாக்ஸ் பண்ணியாச்சா… கிளம்ப வேண்டியது தான்.. எனக்கு தெரிஞ்சு ஒரே ரூட்டு விக்கிரவாண்டி டோல் தாண்டி லெஃப்ட்ல எடுத்து நெய்வேலி வழியா போக வேண்டியது தான்… நீங்க நெய்வேலியை நெருங்குறப்ப அடுத்த பிரேக்குக்கான நேரம் வந்திருக்கும்… நான் பெரும்பாலும் என்னோட பெற்றோர் மற்றும் குழந்தைகளோட போறதுனால 3 மணி நேரத்துக்கு ஒரு பிரேக் கண்டிப்பா எடுக்குற மாதிரி வந்துரும்.. நெய்வேலி ஆர்ச்சுக்கு முன்னாடியே ஹோட்டல் அர்ச்சனா கார்டன்ஸ் இருக்கு… இதுவும் ரொம்ப டீசெண்டான ஹோட்டல்.. கொஞ்சம் expensive. நல்ல இடம்… நல்ல ரிலாக்ஸ் பண்ணிட்டு பயணத்தை தொடரலாம்…

இந்த பயணத்துலயே உள்ள ஒரே ஒரு மோசமான விஷயம்னா அது ரோடு கண்டிஷன் தான். விக்கிரவாண்டில திரும்பினதுல இருந்து அணைக்கரை தாண்டுற வரைக்கும் ரோடு ரொம்ப மோசம்..பல வருஷமாவே இப்படி தான் இருக்கு.. அங்கங்க கொஞ்சம் patch work நடக்குது அவ்ளோ தான்.. இதெல்லாம் பார்த்தா என்ஜாய் பண்ண முடியுமா…

தொடர்ந்து போனோம்னா கொள்ளிடம் ஆற்றை கடந்ததும் ஒரு ரைட் எடுத்து உள்ள போனா திருவிசாநல்லூர் வரும்… உள்ள போறது ஒரு 2km தூரம் தான்… ஆனால் முழுவதும் பச்சை பசேல்னு வயலும் தென்னை மரமுமாக அட்டகாசமான இடம்… அதும் மழை காலத்துக்கு அப்புறம் போனீங்கன்னா கண்கொள்ளா காட்சியாய் இருக்கும்.வயலுக்கு நடுவுல கோவில் ரொம்ப அற்புதமா இருக்கும்..

img_20150411_110704

சின்ன கோவில் தான் ஆனால் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.கோவில் உள்ள நுழைந்ததும் ஒரு அழகிய பெரிய மகிழ மரம் இருக்கும். அதன் போட்டோ என்னிடம் இல்லை.. உங்களுக்கு ஒரு நல்ல surprise ஆக இருக்கும்..கும்பகோணம் சென்றால் மறக்காமல் சென்று வாருங்கள்.

img_20150411_105331

பின் குறிப்பு:

  1. இந்த கோவில் சமீபத்தில் புதுப்பிக்க பட்டிருக்கலாம்…கூகிளில் இன்னும்  இந்த கோவிலின் பழைய படங்கள் தான் உள்ளன. ஏமாற வேண்டாம்.
  2. இது ரிஷப ராசிக்குரிய கோவில். மேலும் விவரங்களுக்கு கூகிளாண்டவரை கேட்கவும்.
  3. இதற்கு மிக அருகில் நடந்து செல்லும் தொலைவில் கடக ராசிக்குரிய கோவிலான கற்கடேஸ்வரர் கோவிலும் உள்ளது.
  4. GPS coordinates – 79.420907,11.006861. இதை பயன்படுத்துவது பற்றி அறிய எனது இந்தியாவில் GPS பதிவை பார்க்கவும்.

காட்ஜெட்ஸ் பத்தி பேசலாமா!!!

தலைப்பை பார்த்துட்டு நான் ஏதோ எக்ஸ்பர்ட்னு நினைச்சிடாதீங்க…ஏதோ எனக்கு தெரிஞ்ச 2-3 காட்ஜெட்ஸ் பத்தி பேசலாம்னு நினைக்குறேன்…

முதலில் JBL !!!

JBL என்பது உலகளவில் முக்கியமான ஒலிபெருக்கி (speaker) நிறுவனங்களில் ஒன்று… இந்தியாவிலும் நிறைய மாடல்கள் உள்ளன… சிறிய ரக ப்ளூடூத் ஸ்பீக்கரில் இருந்து பெரிய அளவிலான ஹோம் தியேட்டர் வரை பல விதங்களில் கிடைக்கின்றன.. நமது விருப்பம் மற்றும் வீட்டில் உள்ள இட  வசதியை பொறுத்து நமக்கு தேவையான ஸ்பீக்கரை தேர்ந்தெடுக்கலாம். பெரிய ஹாலும் 35 -40 ஆயிரம் வரை செலவு பண்ணுவதற்கு வசதி இருந்தால் நல்லதாக ஒரு ஹோம்  தியேட்டர் சிஸ்டம் வாங்கி கொண்டாடலாம்.இதற்காக லட்சங்களில் செலவு செய்பவர்களெல்லாம் இருக்கிறார்கள்.. அது சாத்தியமில்லையா … கவலை வேண்டாம்.. கொஞ்சமாக விட்டு கொடுக்க தயாராக இருந்தால் ஒரு நல்ல மாற்று உபாயம் உள்ளது.

அது தான் JBL sound bar.. இதை தமிழ் படுத்தினால் ரொம்ப படுத்துவது போல் இருக்கும்.. அதனால் அப்படியே விட்டு விடலாம் 🙂 கீழே உள்ள படத்தை பாருங்கள், சவுண்ட் பர்னா என்னவென்று தெரியும்.

jbl1

இந்த சவுண்ட் பார்ல பொதுவாக 2 ஸ்பீக்கர், amplifier, sub-woofer எல்லாம் சேர்ந்து ஒரு பார்(செவ்வக) வடிவில் இருக்கும்.. சில மாடல்களில் sub-woofer மட்டும் தனியாகவும் வரும். sub-woofer தனியாக இருந்தால் ஸ்பீக்கர் effect இன்னும் நன்றாக இருக்கும். இதை சுவற்றில் நாமே எளிதாக மாட்டி கொள்ளலாம். விலையும் 15ஆயிரத்துக்குள் தான் வரும். இதை TV மற்றும் மொபைலில் இருந்து connect பண்ணி கொள்ளும் வசதி இருப்பதால் உபயோகிப்பது எளிது.

இந்த சவுண்ட் பார் இல்லாம நான் பயன் படுத்துற இன்னொரு பொருள் JBL Dock Speaker…இது முக்கியமா இரவு தூங்கும் பொழுது பாடல் கேட்பதற்கு நல்ல சாய்ஸ்…சின்ன speaker ஆனா நல்ல quality sound… FM இல்லை உங்க choice பாட்டு கேட்டுகிட்டு சுகமா தூங்கலாம்.

jbl_dock

இளையராஜாவோ ரஹ்மானோ அனிருத்தோ JBL-ல் பாட்டு கேட்பது ஒரு சுகமான அனுபவம்… எனது 6 வயது மகள் எண்பதுகளில் வந்த இளையராஜா பாடலை hum பண்ணுகிறாள் என்றால் பார்த்து கொள்ளுங்கள் நமது இசையின் மகிமையை…

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !!!

இது ஒரு அறிமுகம் தான்… தேட நிறைய இருக்கிறது… சேர்ந்து தேடலாம்…

இந்தியாவில் GPS (Navigation)

பொதுவாக வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு தெரியும் GPS என்னும் வழிகாட்டும் கருவி அவர்களின் பயணத்துக்கு எவ்வளவு முக்கியமானது என்று !!! நாம் செல்ல வேண்டிய இடத்தின் தெளிவான முகவரி இருந்தால் போதும் எந்த கவலையும் இல்லாமல் அந்த கருவி சொல்லும் வழியில் சென்றாலே நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைந்து விடலாம். வெளிநாடுகளில் இந்த தொழில் நுட்பம் நன்கு முன்னேறி விட்டது. ஆனால் நம் நாட்டில் ?!

இப்பொழுதெல்லாம் நிறைய கார்களில் entertainment சிஸ்ட்டமுடன் ஜிபிஎஸ்ஸும் வந்து விடுகிறது.. entry level hatchback கார்களில் கூட இந்த வசதி உள்ளது… அதனால் எல்லாருக்கும் ஓரளவுக்கு பரிட்சயம் இருக்கலாம்.. இல்லையென்றாலும் இந்த பதிவின் மூலம் பரிட்சயப்படுத்தி கொள்ளலாம்!!!

முதல் நல்ல விஷயம் இந்தியாவில் GPS எதிர்பார்த்ததை விட நன்றாகவே வேலை செய்கிறது..இரண்டாவது நல்ல விஷயம் நமது காரில் இந்த கருவி இல்லையென்றாலும் வெளி மார்க்கெட்டில் வாங்கி பயன் படுத்தி கொள்ளலாம்…

lx440

சரி… இப்போது நான் உபயோக படுத்திக்கொண்டிருக்கும் GPS சேவை பற்றி சொல்கிறேன்…ஒரு சிறிய விளக்கம்… GPS என்பது ஒரு தொழில்நுட்பம்… அந்த தொழில்நுட்பத்தை பயன் படுத்த வேண்டுமென்றால் பல நிறுவனங்கள் இருக்கின்றன… வெளி நாடுகளில் TomTom, NavMan போன்ற நிறுவனங்கள் உள்ளன.. இந்தியாவில் நான் உபயோகிப்பது MapMyIndia என்னும் நிறுவனத்தின் சேவையை… ஒரு விதத்தில் இந்த துறையில் முன்னோடி நிறுவனம் என்று கூட சொல்லலாம்… முக்கியமாக இரண்டு விதங்களில் இந்த சேவையை பயன் படுத்தலாம்…

  1. Portable – தேவையான நேரத்தில் மட்டும் காரில் முன்கண்ணாடியில் பொருத்தி பயன்படுத்துவது
  2. In-Dash – இது ஒரு package. ஆடியோ,வீடியோ,ப்ளூடூத் சாதனங்களுடன் ஜிபிஎஸ்ஸும் காரின் டாஷ்போர்டில் இணைந்திருக்கும்.. நான் இதை தான் பயன் படுத்துகிறேன்..

மேலும் விவரங்களுக்கு இனைய தளத்தில் தேடவும்…

சரி இப்போது இதை எப்படி பயன் படுத்துவது என்று பார்ப்போம்… நான் முதலில் சொல்லிய படி, தெளிவான முகவரி மிகவும் முக்கியம். இது தான் நமது நாட்டின் பெரிய பிரச்சனை. english transalation -ல பல குழப்பங்கள் இருக்கிறதுனால ஒரு முகவரியை தேடல்(மெனு) மூலம் கண்டு பிடிப்பது சிரமமே.. அதனால் பயணத்துக்கு முன் முகவரிகளை தேடி favourites-ல் பதிந்து வைத்து கொள்வது நல்லது… சரி, எப்படி தேடுவது? address match ஆகா மாட்டேங்குதே… கவலை இல்லை… இருக்கவே இருக்கு முகவரிக்கான universal code… அது தான் latitude மற்றும் longitude… ஸ்கூல்ல படிச்ச மாதிரி இருக்குமே.. அதே தான்… எந்த இடத்துக்கும் latitude மற்றும் longitude உண்டு… அதை கொண்டும் முகவரியை கண்டு பிடிக்கலாம்.. அது சரி, எப்படி இந்த latitude மற்றும் longitude கண்டு பிடிப்பது? அதற்கு தான் கூகுளாண்டவர் இருக்கிறாரே… அவருக்கு தெரியாததா? இப்ப நீங்க திருக்கடையூர் அபிராமி கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று வைத்து கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது:

  1. Go to –> https://www.google.co.in/maps
  2. Zoom in – கோவில் நுழைவிடம் வரை zoom செய்யவும். எவ்வளவு zoom செய்கிறோமோ அந்த அளவுக்கு துல்லியமான இடத்தை அடைய முடியும்!!!
  3. right click on map – அந்த மெனுவில் இருந்து whats here மெனுவை click செய்யவும்gps1
  4. இப்பொழுது உங்களுக்கு நீங்கள் zoom செய்த இடத்தின் முகவரி latitude மற்றும் longitude-ல் display ஆகும்            gps2
  5. இதை GPS கருவியில் உள்ளீடு(input ) கொடுத்தால் வேலை முடிந்தது

 

 

இந்த முறையின் மூலம் 99% நான் சரியான இடத்தை அடைந்திருக்கிறேன்… அந்த மீதமுள்ள 1% பற்றி கேட்கிறீர்களா… அது என்னவென்றால் வெகு சில சமயங்களில் இந்த கருவி நம்மை சில குறுகிய சந்துக்குள் அழைத்து செல்லலாம்… அந்த மாதிரி நேரங்களில் நாம் கொஞ்சம் உஷாராக தவிர்த்து விடுவது நல்லது. கருவியை alternative ரூட்டை கண்டுபிடித்து வழி காட்டும்.

இன்னும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த கருவியில் தமிழை நமது மொழியாக தேர்ந்தெடுத்து கொள்ளலாம்… என்னை மாதிரி ஆட்களுக்கு left, right சுட்டு போட்டாலும் வராது… ஊரில் அங்கிட்டு இங்கிட்டுனே பேசி எத்தனை வருஷம் ஆனாலும் left, right  வர மாட்டேங்கிறது. அதனால் இடது,வலது என்று கேட்கும் பொது நிம்மதியாக இருக்கிறது… அதே மாதிரி உங்களுக்கு விருப்பமான குரலை கூட தேர்ந்தெடுத்து கொள்ளலாம்… எனது GPS-ஐ நான் அனுஷ்கா என்று அழைப்பது வழக்கம்.. 🙂

Live Traffic updates , map version இந்த மாதிரி கலந்துரையாட நிறைய விஷயங்கள் உள்ளது… நான் ரெடி …. நீங்க ரெடியா ?!!

டிஸ்கி: அங்கங்கே தங்கிலீஷில் எழுதும் படி நேர்ந்து விட்டது. என்ன செய்ய topic அப்படி.. மன்னிக்கவும்…